தொடர் விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மலை அழகை கண்டு ரசிக்க வருகை புரிந்தனர்.