கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, மணிமுத்தாற்றில் மணல் அள்ளியதாக டிராக்டர் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல, மோட்டாம்பட்டி கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு வீடு கட்ட மணல் அள்ளியதாக கூறி, போலீசாருடன் பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.