சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்று காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில் மின்விளக்கு கம்பம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பட்டது. சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு கம்பம், பலத்த காற்றில் சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.