விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சொத்து தகராறில் 12-ம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வீட்டின் அருகில் மாடு கட்டுவதில் ஏற்பட்ட சின்ன தகராறு கொலையில் முடிந்தது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தித்தொகுப்பு...மாடு கட்டுவது தொடர்பாக தகராறுவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மழையம்பட்டு ஊராட்சி தக்கா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரப்பன் - மலர். இத்தம்பதியின் 2 மகன்களில் இளைய மகன் விக்னேஷ், அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் காந்தி மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். வீரப்பன் குடும்பத்துக்கும், அவரது பெரியப்பா மகன் சுப்பிரமணியன் குடும்பத்துக்கும், வீட்டின் அருகே உள்ள இடம் தொடர்பாக நீண்டகாலமாக தகராறு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், பிரச்னைக்குரிய இடத்தில் மாடு கட்டுவதில் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 19ஆம் தேதி மாலை வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. அப்போது, சுப்பிரமணியன், அவரது மனைவி பூபதி, மகன் அஜய் மற்றும் சுப்பிரமணியன் வேலை செய்து வரும் செங்கல் சூளையின் உரிமையாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் சேர்ந்து வீரப்பனையும், அவரது மனைவி மலரையும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், மலரின் மண்டை உடைந்தது.பதறியடித்துக் கொண்டு ஓடி வந்த விக்னேஷ்பள்ளி முடிந்து வீடு திரும்பிய விக்னேஷுக்கு இந்த தகவல் தெரியவரவே, பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்துள்ளார். அப்போது, 4 பேரும் சேர்ந்து விக்னேஷ் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த விக்னேஷை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விக்னேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். மறுநாள், விக்னேஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊரான தக்கா கிராமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, விக்னேஷுடன் பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.கதறி அழுத மாணவர்கள், பெற்றோர், உறவினர்களால் சோகம்முதல்நாள் உயிருடன் பார்த்த நண்பனை மறுநாள் சடலமாக பார்த்ததும் தங்களையும் மீறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும், விக்னேஷின் சடலத்தை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு கதறி அழுதது, காண்போர் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது. தாக்குதலில் மண்டையில் காயமடைந்த விக்னேஷின் தாயார் மலர், தலையில் கட்டுடன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார். இதனிடையே, விக்னேஷை கொலை செய்த சுப்பிரமணியன், அவரது மகன் அஜய் ஆகியோரை கைது செய்த போலீஸார், தலைமறைவாகி விட்ட சுப்பிரமணியன் மனைவி பூபதி, செங்கல் சூளை உரிமையாளர் சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.இதையும் பாருங்கள் - வெங்காரம் சாப்பிட்ட மாணவி பலி