சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில், செப்டோ டெலிவரி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் திகில் கிளப்பியுள்ளது. ஆள் நடமாட்டம் இருக்கும் போதே போதையில் கண்மூடித்தனமாக அரிவாளை வைத்து தாக்கியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பழிக்கு பழி வாங்க நடந்த சம்பவம்சென்னை, வேளச்சேரி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவன் பார்த்திபன். செப்டோ நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை செய்து வந்த பார்த்திபன் மீது போதை மாத்திரை விற்பனை செய்ததாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. பார்த்திபனுக்கும், வேளச்சேரி செக் போஸ்டை சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் இடையே போதை மாத்திரை விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த தகராறு மோதலாக மாற, 3 நாட்களுக்கு முன்பு வினோத் குமாரை தனது நண்பர்களுடன் சென்று பார்த்திபன் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விரோதத்தில் இருந்த வினோத்குமார், பார்த்திபனை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, 2 நாட்களாக பார்த்திபனை வினோத்குமார் தேடி வந்ததாக கூறப்படுகிறது. விரட்டி அடித்த பொது மக்கள்இந்நிலையில், வேளச்சேரி ஏ.எல்.முதலி தெருவில் பார்த்திபன் நடந்து சென்று கொண்டிருக்க, பின்னாடியே துரத்தி வந்த 3 பேர் கொண்ட கும்பல், பார்த்திபனை சுற்றி வளைத்து அரிவாளால் கொடூரமாக தாக்கியது. பார்த்திபனின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் ஓடி சென்று பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருக்க, என்ன செய்வது என தெரியாமல் கற்களை ஆயுதமாக பயன்படுத்தி, தாக்குதல் கும்பலை பொதுமக்களே விரட்டியடித்து இருக்கிறார்கள்.போதை மாத்திரை தகராறுதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீஸ் பார்த்திபனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததோடு, தாக்குதல் நடத்திய கும்பலில் 3 பேரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகிறது போலீஸ். ரத்த வெள்ளத்தில் அந்த இளைஞர் துடிக்கும் போது, அங்கிருக்கும் பொதுமக்கள் குரல் எழுப்பாமல் இருந்திருந்தால், அந்த இளைஞரை அந்த கும்பல் கொலையே செய்திருக்கும் என்ற நிலையில், போதை மாத்திரை தகராறு வெட்டுக் குத்தில் முடிந்திருக்கிறது.இதையும் பாருங்கள் - துப்பு கொடுக்காததால் காக்கிகளின் வில்லத்தனம்