ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மீண்டும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாம்பன் ரயில்வே தூக்குப்பாலம் பணிகள் 90% நிறைவடைந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் செயல் இயக்குநர் தலைமையில், ரயில்வே வாரிய அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர். மண்டபம் ரயில் நிலையம் முதல் ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஆய்வு மேற்கொண்ட ரயில்வே நிர்வாக இயக்குநர், பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு ரயில்வே சேவை தொடங்கும் என்று தெரிவித்தார்.