திமுக ஊழலை மறைத்து திசை திருப்புவதற்காக மும்மொழி கொள்கை மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை பேசி வருவதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக அரசும் பாஜகவும் பேசி வைத்ததை போல் தினமும் விவாதித்து வருவதாக சாடினார்.