ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சிப்புத்தூர் பகுதியில் உள்ள MRF டயர் தொழிற்சாலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரி, ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.