கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காய்கறி மூட்டையில் 25 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கேரளாவிற்கு கடத்த முயன்ற அண்ணன் மற்றும் தம்பியை போலீஸார் கைது செய்தனர். காரமடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார், அந்தவழியாக சென்ற ஜீப்பை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, காய்கறி மூட்டைக்குள் பதுக்கி வைத்து கஞ்சா கடத்தியதை கண்டுபிடித்தனர்.