சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தவெக மாவட்ட செயலாளர் வருகையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் கார் சிக்கி கொண்ட நிலையில், தகவலறிந்து வந்த டிஎஸ்பி போக்குவரத்தை சீர் செய்தார். இருப்பினும் அமைச்சர் டிஆர்பி ராஜாவின் கார் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.