ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்புக் கூட்டம் கோவை பாக முகவர்கள் கூட்டம் மற்றும் கரூருக்கு பிறகு கொங்கு மண்டலத்தில் ஈரோடு பகுதியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார் தனி விமான மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு 11 மணியளவில் மக்கள் சந்திப்பு திடலை வந்தடைகிறார்16 ஏக்கர் பரப்பளவு கொண்ட திறந்த வெளி திடலில் பிரச்சார வாகனம் மீது ஏறி நின்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்கிறார் விஜய் ஈரோடு மக்கள் சார்ந்த மஞ்சள், சாயக் கழிவுகள், பெருந்துறை சிப்காட் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் அரசியல் கருத்துகளும் பேச உள்ளார்பெண்களுக்கு தனி இடம், அவசரகால வெளியேறும் வழி, கழிப்பறை, குடிநீர், சிசிடிவி கேமரா, மருத்துவ குழு என அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் 1500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர் பெருந்துறை அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள மைதானத்தில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறதுஇந்நிகழ்ச்சியை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்- கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனதவெக தொண்டர்கள்10,000 பேர்; பொதுமக்கள் 25,000 பேர் பங்கேற்க உள்ளனர்மொத்தம் 16 ஏக்கர் பரப்பளவில் இந்நிகழ்ச்சிக்கான மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது விஜய் வழக்கம் போல தமது பிரசார வாகனத்தின் மீது நின்று பேசுகிறார்.இந்த மைதானம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் சுமார் 500 பேர் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மைதானம் முழுவதும் மொத்தம் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.72 மருத்துவர்கள்- 120 நர்சுகள் அடங்கிய குழு மருத்துவ முகாம்களில் பணியாற்றுவர் 20 இடங்களில் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன 80 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமைதானத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற 14 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன காவல்துறை கண்காணிப்பாளர் சுஜாதா தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்4 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொண்டர்கள் இருக்கும் இடத்திலிருந்து விஜயை பார்ப்பதற்கு 6 led திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது