பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான TVS மோட்டார் கம்பெனி தனது iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இலங்கையில் அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய 2.2. kWh பாட்டரியுடன் வரும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆறு நிறங்களில் மூன்று வேரியன்ட்களில் விற்பனைக்கு வெளியாகி உள்ளது. வாடிக்கையாளர்களின் செலவினை குறைக்கும் நோக்கில் 2.2 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதால் இந்த ஸ்கூட்டர் பிரிமியம் எலக்ட்ரிக் மொபிலிட்டியை வழங்கும் என TVS தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இலங்கையிலும் டிவிஎஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. உலகளாவிய அளவில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை நான்கு லட்சத்தை தாண்டி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.