தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.கும்பகோணத்தை சேர்ந்த 5 பேர், திருமண நிகழ்ச்சிக்காக, மயிலாடுதுறைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.அதேபோன்று, சென்னையில் இருந்து 4 பேர் மற்றொரு காரில் திருவிடைமருதூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.அப்போது, திருவிடைமருதூர் எஸ்பிஐ வங்கி அருகே, 2 கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இரு கார்களிலும் பயணம் செய்த 9 பேர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.