திருவள்ளூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உள்பட இருவர் உயிரிழந்தனர். சென்னையில் வசித்து வந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் குல தெய்வ வழிபாட்டிற்கு சொந்த ஊர் சென்ற நிலையில், அவரது மகன் ஜனார்த்தனன் ஆரணியாற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதேபோல்,கோவிந்தன் என்பவர் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார்.