திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் இரு வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். செங்கம் புதிய குயிலம் பகுதியை சேர்ந்த அன்பரசு என்பவர், தன்னிடம் தீபாவளி சீட்டு போட்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தார். இதேபோல் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இருவரின் உடல்களையும் மீட்டு செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.