சாலை விபத்து : காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலம் பகுதியில் இன்று அதிகாலை வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் நோக்கி வந்த கனரக லாரி லாரி ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் இவ்விபத்தில் லாரி ஓட்டுநர் சிக்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் 1நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர். இவ்விபத்தில் காரணமாக காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் 4நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் சுமார் 8கிலோ மீட்டருக்கு மேலாக பள்ளி,கல்லூரி வாகனங்கள் உட்பட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.இதனையெடுத்து விபத்துக்குள்ளான லாரியை தாலுகா போலீசார் அப்புறத்தி பல மணிநேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர். குறிப்பாக காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் புதிய மேம்பாலம் அமைக்க 100கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை போடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் நெடுஞ்சாலை துறையினர் காலம் தாழ்த்தி அலட்சியம் காட்டுவதாக வாகன ஓட்டிகள் குற்றசாட்டினை முன்வைக்கின்றனர். Related Link வாழை நார் பிரித்தெடுக்கும் பணி தீவிரம்