திருப்பத்தூர் மாவட்டம் பசிலிக்குட்டையில் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்றப்பள்ளியிலிருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம், திருப்பத்தூர் நோக்கி சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.