நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் செங்கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். புதுப்பள்ளி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரை செங்கல் கற்களால் அடித்துக் கொன்றதாக, அதே பகுதியை சேர்ந்த சரவணன், ஜெயபால் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.