கன்னியாகுமரியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜூ என்பவர், பைக்கில் அதிவேகமாக அருமனையில் இருந்து குழித்துறைக்கு சென்று கொண்டிருந்தார். அண்டுகோடு தபால் நிலைய வளைவு பகுதியில் சென்றபோது எதிரே கடமகோடு பகுதியை சேர்ந்த அபி என்பவர்அதிவேகமாக ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அபி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.