தமிழக கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுக்குழியில் வளைவான சாலையில் இரு சக்கரவாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் தூக்கிவீசப்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியானது. வெள்ளறடை பகுதியில் இருந்து ஆறாட்டுக்குழி நோக்கி வந்த லாரி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அதில் வந்த கத்திப்பாறை பகுதியை சேர்ந்த அருண், ஷைஜு,மனோஜ் மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். காயமடைந்த 3 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.