திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாகவும், பலமுறை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.