தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார், தனக்கு சொந்தமான நிலத்தில் ஊரணி அமைப்பதாக கூறி எந்தவித அனுமதியும் பெறாமல் கல்குவாரி அமைத்து வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெடி வைத்து பாறைகளை உடைக்கும்போது கற்கள் சிதறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதுடன், நிலத்தடி நீரும் விவசாயமும் பாதிக்கும் அச்சம் உள்ளதால் கல்குவாரி அமைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் உள்பட பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.