கார்த்திகை மாத அமாவாசையை ஒட்டி, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது, கையில் தீபம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது. விழாவில், அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.