வேலூர் வள்ளிமலை கோவிலில் அமைச்சர் பங்கேற்ற விழாவில் தேசிய கீதத்தை தப்புத்தப்பாக பாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலராக ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளர் ஏ.வி.சாரதிக்கு அமைச்சர் துரைமுருகன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் வேல்முருகனும், கோவில் அலுவலர்களும் தேசிய கீதத்தை தப்பும் தவறுமாக பாடினர்.