வாலாஜாபேட்டை நகராட்சியில் நடந்த மாதாந்திர மன்ற கூட்டத்தில் தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வாலாஜாபேட்டை நகராட்சியில் நகர மன்ற மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் ஹரிணிதில்லை தலைமையில் துணைத்தலைவர் கமலராகவன் ஆணையாளர் இளையராணி உட்பட அதிமுக, திமுக, பாஜக மற்றும் சுயேச்சை ஆகிய 24 நகரமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்திலேயே முதன்மை நகராட்சிமேலும் நகர மன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய வார்டு பகுதியில் உள்ள குறைகளை மன்றத்தின் வாயிலாக முன்வைத்து பேசினார்கள் அப்போது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் பூக்கடை மோகன், சுரேஷ், நந்தகுமார் உள்ளிட்டோர் மன்ற கூட்டத்தில் வாலாஜாபேட்டை நகராட்சி நிர்வாகம் தமிழகத்திலேயே முதன்மை நகராட்சி என்று பெயர் பெற்றது.அடுக்கடுக்காக குற்றச்சாட்டுஆனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் தோல்வி அடைந்துள்ளதாகவும் குறிப்பாக வாலாஜா சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் பெருகுவதால் அதனை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து வருவதாகவும் அதேபோல் சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்து பேசினார்கள்.மன்ற கூட்டத்தில் வாக்குவாதம்இதற்கிடையே உறுப்பினர்கள் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கண்ட நகர மன்ற தலைவர் பெருமைமிக்க வாலாஜாபேட்டை நகராட்சி குறித்து அவதூறு குற்றச்சாட்டுகளை வைப்பதாக கூறி தலைவர் மற்றும் திமுக வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. Related Link சாலை குறுக்கே எமன் - அச்சத்தில் மக்கள்