தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக பூதலூரை சேர்ந்த ஜீவகுமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நூலகத்தின் இயக்குநர் மற்றும் நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், மாவட்ட ஆட்சியரும், முதன்மை கல்வி அலுவலரும் கூடுதல் பொறுப்புகளாக நிர்வகித்து வருவதாகவும் கூறியிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கலாச்சாரத் துறை, தமிழக பள்ளிக்கல்வித்துறை, நிதித்துறை, தொல்லியல் துறை ஆகியோர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.