திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தர்காவில் நடைபெற்ற வள்ளி கும்மியாட்டத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். தர்கா கமிட்டி தலைவர் ஜக்ஷர் பாஷா ஏற்பாட்டின் பேரில், வேலராசி வள்ளி கும்மி கலை குழுவினர் சார்பில் கிராமிய பாடல்களுக்கு ஏற்ப 50க்கும் மேற்பட்டோர் ஒருசேர நடனம் ஆடினர்.