நெல்லை மாவட்டம் வள்ளியூர் முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் கோவில் தேரோட்டத்திற்கு பிறகு உணவிற்காக மக்கள் பல மணி நேரம் காத்திருந்ததாக குற்றம் சாட்டினர். பொத்தை மலையடிவாரத்தில் உள்ள முத்துகிருஷ்ண சுவாமியின் குருபூஜை மற்றும் குரு ஜெயந்தி விழா கடந்த வாரம் தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில் இன்று 5 கிலோமீட்டர் தூரத்திற்கான கிரிவல பாதையில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தின் முடிவில் மக்களுக்கு உணவு, மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் உணவை வாங்குவதற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பலர் மயங்கி விழுந்தனர்.