சென்னை, கொளத்தூரில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகம், முழு நேர நூலகம், ஐ.ஏ.எஸ். பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.படைப்பகத்தை திறந்து வைத்து, மாணவர்களுடன் தேனீர் அருந்தினார் முதல்வர்.பெரவள்ளூர் புறக்காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி, காவல் துணை ஆணையாளர் அலுவலக கட்டுமானப் பணிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.