நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண் பெண் என ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் கூடி நின்று தேரில் எழுந்தருளிய தியாகராஜ சாமியை வழிபட்டனர்.