தியாகி இமானுவேல் சேகரின் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி நோக்கி சென்ற வாகனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மதுபாட்டில்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு அருகே மதுரை மாவட்ட காவல்துறையினர் தற்காலிக சோதனை சாவடி அமைத்து சோதனை மேற்கொண்டனர். அதில் இரண்டு சிறிய அளவிலான கத்தி, ஒரு அரிவாள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட மதுபாட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.