கடந்த 2005ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் பவாரியா கொள்ளையர்களால் அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை செய்யப்பட்ட வழக்கு.ராஜஸ்தான், ஹரியானாவை சேர்ந்த ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என நீதிபதி முன்பு தெரிவித்த பவாரியா கொள்ளையர்கள்..3 பேருக்கும் வரும் 24ஆம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்கிறது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்.சுதர்சனம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயில்தார் சிங் என்பவன் குறித்து 24ஆம் தேதி தெரிவிக்கப்படும் - சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு.பவாரியா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் சுதர்சனத்தின் மகன் கே.எஸ்.விஜயகுமார் கண்ணீருடன் வேண்டுகோள்.