பள்ளி மாணவிகளை மிரட்டி மிரட்டியே விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல். தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு வந்த சிறுமிகள். மாணவிகளிடம் நடத்திய விசாரணை மூலம் சிக்கிய 23 பேர். ஏற்கனவே மதபோதகர் உள்ளிட்ட 16 பேர் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தலைமறைவாக இருந்து பிடிபட்ட 3 பேர் மீது தனியாக நடந்து வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு. மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்கிய கும்பலுக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்கள் என்ன?பள்ளிக்கு சென்று வந்த மாணவிகளிடம்...2014 ஆம் ஆண்டு, வேர்க்க விறுவிறுக்க ரெண்டு சிறுமிகள் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடி வந்துருக்காங்க. அந்த சிறுமிகளை ஆசுவாசப்படுத்தி அமைதியா உக்கார வச்சி விசாரிச்சிருக்காங்க பெண் காவலர்கள். அப்பதான் அதிர வைக்கிற மாதிரி பல விஷயங்களை சொல்லிருக்காங்க அந்த சிறுமிகள். கடலூர், திட்டக்குடி பகுதியில உள்ள ஒரு அரசுப் பள்ளியில 7ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்த 13 வயசு சிறுமியும், 8ஆம் வகுப்பு படிச்சிட்டு இருந்த 14 வயசு சிறுமியும் தினமும் ஸ்கூலுக்கு சேர்ந்து போயிட்டு வந்துருக்காங்க. அப்படி, போற வழியில செந்தில்குமார்ங்குறவரோட மனைவி தனலட்சுமி இட்லி கடை நடத்திட்டு இருக்காங்க. தினமும் மாணவிகளை பார்த்த தனலட்சுமி, என்னம்மா சாப்டீங்களா? சாப்பிடலனா எங்க கடையில இட்லி வாங்கிக்கோங்க, காசு இல்லனாலும் பரவா இல்லனு அக்கறையா சொல்லிருக்காங்க. ஆனா, அந்த அக்கறைக்கு பின்னால பெரிய சூழ்ச்சியே இருக்குது அப்டிங்குறது சிறுமிகளுக்கு தெரியாமபோச்சு.சிறப்பு பூஜை நடப்பதாக கூறி...சிலநேரங்கள்ல சிறுமிகளுக்கு வலுக்கட்டாயமா பார்சல்ல இட்லி கட்டிக்குடுத்த தனலட்சுமி, அதுக்கான பணத்தையும் வாங்க மறுத்துருக்காங்க. ஒருநாள், எங்க வீட்ல ஒரு பூஜை பண்றோம், ரெண்டுபேரும் வர்றீங்களா? ஸ்கூலுக்கு லீவு போட்ருங்கனு சொல்லிருக்காங்க தனலட்சுமி. அவங்கள நம்புன சிறுமிகள் ஸ்கூலுக்கு போகாம தனலட்சுமிகூட அவங்க வீட்டுக்கு போய்ருக்காங்க. அங்கபோனா, பூஜை செய்றதுக்கான எந்த அறிகுறியுமே இல்ல. அப்போ, வீட்டுக்குள்ள இருந்த தனலட்சுமியோட கள்ளக்காதலன் ஆனந்தராஜ், சிறுமிகள் ரெண்டுபேரையும் பாலியல் வன்கொடுமை செஞ்சிருக்கான். அடுத்து, வீட்ல நடந்த எந்த விஷயத்தையும் பெற்றோர்கிட்டயோட இல்ல சொந்தக்காரங்ககிட்டயோ சொன்னா உங்களை கொன்னுருவோம்னு ஆனந்தராஜூம், தனலட்சுமியும் மாணவிகளை மிரட்டிருக்காங்க. அதனால, பயந்த மாணவிகள் வெளியில எதுவுமே சொல்லாம வழக்கம்போல ஸ்கூலுக்கு போயிட்டு இருந்துருக்காங்க. அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைஆனா, மாணவிகளோட பயத்தயே தங்களுக்கு ஆயுதமா பயன்படுத்திகிட்ட ரெண்டுபேரும், தொடர்ந்து சிறுமிகளை விபச்சாரத்துக்கு பயன்படுத்திருக்காங்க. அதோட, விருத்தாச்சலத்துல இருந்த விபச்சார புரோக்கர் கலாவோட வீட்டுக்கு மாணவிகளை அழைச்சிட்டுப்போய், அன்புங்குறவர் மூலமா பாலியல் வன்கொடுமை பண்ணிருக்காங்க. அடுத்து, தொடர்ந்து மாணவிகளை பாலியல் தொழில்ல ஈடுபடுத்திருக்காங்க. மேலும், திட்டக்குடியை சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் வீட்டுக்கு மாணவிகளை அழைச்சிட்டுப்போய் ரெண்டு நாட்கள் தங்க வச்சும் விபச்சாரத்துல ஈடுபடுத்திருக்காங்க. பிரண்ட் வீட்டுக்கு போறோம், ஸ்கூல்ல இருந்து டூர் அழைச்சிட்டுப் போறாங்கனு பெற்றோர்கிட்ட பொய் சொல்லவச்சி மாணவிகளை அழைச்சிட்டு போய்ருக்காங்க. நினைச்சதவிட அதிகமா பணத்த பார்த்த தனலட்சுமியும், ஆனந்தராஜூம் வளவனூர், சேலம், வடலூர், நெய்வேலினு பல இடங்களுக்கு மாணவிகளை அழைச்சிட்டுப்போய் பாலியல் தொழில்ல ஈடுபடுத்திருக்காங்க.காவல் நிலையத்திற்கு வந்த மாணவிகளிடம் விசாரணைஇதுக்குமத்தியில, அரியலூர் இடையாக்குறச்சியை சேர்ந்த சேகர் மகன் சதீஷ்குமாரும் அவரோட மனைவி தமிழரசியும், மாணவிகளை எங்ககிட்ட ஒப்படைச்சிருக்கா பல்க்கா பணம் தர்றோம்னு சொல்லிருக்காங்க. ஆயிரக்கணக்குல பணத்த பார்த்த தனலட்சுமிக்கு லட்சக்கணக்குல பணம் பாக்கணும்ங்குற ஆசை வந்துருக்குது. அதனால, சதீஷ்குமார்கிட்ட பெரிய தொகையை வாங்கிக்கிட்டு மாணவிகளை ஒப்படைச்சிருக்காங்க. அடுத்து மாணவிகள் தன்கைவசம் வந்ததும், பள்ளி விடுமுறை நாட்கள்ல ஸ்பெஷல் கிளாஸ்னு வீட்ல சொல்லிட்டு வெளிய வந்துரணும், எப்ப கூப்ட்டாலும் பெற்றோர்களுக்கு தெரியாம வெளிய வரணும்னு தங்களோட பங்குக்கு மிரட்டிருக்காங்க சதீஷ்குமாரும், தனலட்சுமியும். இதுக்குமத்தியில, வடலூர்ல உள்ள தங்களோட வீட்ல ரெண்டுநாள் தங்கவச்சி மாணவிகளை பாலியல் தொழில்ல ஈடுபடுத்திருக்காரு சதீஷ்குமார். அப்போ, அங்க இருந்து தப்பி ஓடி திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ருக்காங்க மாணவிகள். அடுத்து நடத்துன விசாரணையில விபச்சார கும்பலோட அத்தனை கேடுகெட்ட வேலையும் வெளிச்சத்துக்கு வந்துருக்குது.23 பேர் கொண்ட கும்பலில் 19 பேர் கைதுஅதுக்குப்பிறகு, ஆனந்தராஜ், தனலட்சுமி, சதீஷ்குமார், தமிழரசி, கபிலன், மதபோதகர் அருள்தாஸ்னு 23 பேர் பேர் வழக்குப்பதிவு பண்ணி வழக்குப்பதிவு தேடுதல் வேட்டையில ஈடுபட்ட போலீசார் 19 பேரை கைது பண்ணிருக்காங்க. அதுல, சதீஷ்குமார், அவரோட மனைவி தமிழரசி உடபட நாலு பேர் தலைமறைவாகிட்டாங்க. இதுக்குமத்தியில இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, 2016 ஆம் ஆண்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாத்தப்பட்டுச்சு. அடுத்து விசாரணையில இறங்குன சிபிசிஐடி 19 பேர் மேலயும் கடலூர் நீதிமன்றத்துல குற்றப்பத்திரிகை தாக்கல் செஞ்சாங்க. இதுக்குஇடையில, வழக்கு விசாரணை நடந்துட்டு இருக்கப்பயே ரெண்டுபேர் உயிரிழந்துட்டாங்க. அதேமாதிரி ஒரு பெண் வழக்குல இருந்து விடுவிக்கப்பட்டாங்க. அடுத்து, மதபோதகர் அருள்தாஸ் உட்பட 16 பேர் மேலயும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால 2019-ல அவங்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதிச்சது. அதுல அதிகபட்சமா மதபோதகர் அருள்தாஸ்க்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுச்சு. அடுத்து, தலைமறைவா இருந்த சதீஷ்குமார், தமிழரசி, கபிலன், சலீம்பாஷா மனைவி ஜெபினாவை போலீசார் தீவிரமா தேடிட்டு இருந்தாங்க. அந்த, தேடுதல்வேட்டையில சிக்குன ஜெபினாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுச்சு.தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனைஅடுத்த கொஞ்ச நாள்லயே, திருவண்ணாமலை, தஞ்சாவூர் பகுதிகள்ல பதுங்கி இருந்த சதீஷ்குமார், தமிழரசி, கபிலன் 3 பேரையும் கைது பண்ணிட்டாங்க போலீசார். இந்த 3 பேருக்கும் கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்துல தனியா வழக்கு நடந்துட்டு இருந்தது. இந்த வழக்குல அனைத்து விசாரணைகளும் முடிவடைஞ்சதால 3 பேருக்கும் நீதிமன்றம் தண்டனை விதிச்சிருக்குது. சிறுமிகளுக்கும், தங்களுக்கும் எந்த சம்மந்தமுமே இல்ல, அவங்க பொய் சொல்றதா 3 பேரும் வழக்கை திசைதிருப்ப பாத்தும் அது முடியல. அடுத்து, 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிச்ச நீதிபதி, சதீஷ்குமாருக்கு ரூ.45 ஆயிரம் அபராதமும், தமிழரசிக்கு ரூ.30 ஆயிரம், கபிலனுக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிச்சி உத்தரவிட்ருக்காரு.இதையும் பாருங்கள் - கணவன் கையில் ஆபாச வீடியோ?