கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வேட்டையன் என்ற ஒற்றைக்காட்டு யானை, வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். தெக்குபாளையம் அடுத்த கென்னடி தென்றல் அவன்யூ பகுதியில் இரவு நேரத்தில் உணவு தேடி அலைந்த வேட்டையன் என்ற காட்டு யானை, வடமாநில இளைஞர் தங்கிருந்த அவர்களது அறைக்குள் நுழைய முயன்றது.