news-tamil-logo

3/16/2026, 3:40:10 PM

news-tamil-logo
more
Home districtnews தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்

தஞ்சை, செங்கிப்பட்டி

Posted on: Mar 04, 2026 07:25 AM

57

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக வெற்றிக் கழகத்தின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை தஞ்சையில் அறிவித்தார் தவெக தலைவர் விஜய். 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய விஜய் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

* டெல்டா விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வோம்.

* 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும் 5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க் கடனை 50% வரை ரத்து செய்வது குறித்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம்.

* 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளின் மருத்துவம், பொறியியல் தொழில்நுட்ப கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும்.

* விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டங்களும் கொண்டுவரப்படாது, மத்திய அரசின் அழுத்தம் இருந்தாலும் தவெக அதனை முழுமையாக நிராகரிக்கும். எப்போதும் விவசாயிகளின் பக்கமே தவெக நிற்கும்.

* கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் முளைத்து வீணாவதை நம்முடைய அரசு பார்த்துக்கொண்டு இருக்காது. போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, நெல்மூட்டைகளை ஏற்றி இறக்குவதற்கோ ஒரு பைசா கூட கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். கமிஷன் வாங்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.

* ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.

* மீனவர்களுக்கு மத்திய அரசு சட்டப்படி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு தவெக உண்மையான அழுத்தம் கொடுக்கும்.

* கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர் சாலை பேருந்து வசதி என அடிப்படை விஷயங்களுக்கு முக்கியத்துவம், பெண்கள், குழந்தைகள், இளைஞர்களுக்கு முக்கியத்துவம்

* அரசு வேலைவாய்ப்பு மட்டுமின்றி தனியார் வேலைவாய்ப்புகளுக்கான உத்தரவாதமும் உருவாக்கப்படும்

இவ்வாறு விஜய் பேசினார்.

Related Link
பச்சை துண்டுடன் மேடையேறி விஜய் அதிரடி பேச்சு

பச்சை துண்டுடன் மேடையேறி விஜய் அதிரடி பேச்சு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.64 கோடிக்கு மேல் வசூலித்த தாய் கிழவி திரைப்படம்

0
4 mins agoshare
Thaai kizhavi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved