பல்லடம் பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த தின அன்னதான நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பல்லடம் எம்.எல்.ஏ., எம் எஸ் எம் ஆனந்தன் பங்கேற்று ஜெயலலிதாவின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.சினிமாவில் பேசுவது போன்று பேசுகிறார் விஜய்அப்போது செய்தியாளர்களை சந்தித்த உடுமலை ராதாகிருஷ்ணன் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சினிமா படம் போன்று தான் ஹீரோ என்றும் ஸ்டாலினை வில்லன் என்றும் பேசி வருவதாகவும், அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டியே தவிர விஜயின் பேச்சில் அரசியல் களமோ தேர்தல் மக்கள் நலனோ இல்லை என்றும் குற்றச்சாட்டினார். சிறுவனுக்கு பொன்னாடை போர்த்தி மகிழ்ச்சிதொடர்ந்து சசிகலா புதிய கட்சி துவங்குவது குறித்து கேள்விக்கு அதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது என தெரிவித்த அவர், முன்னதாக பேருந்து நிலையத்துக்குள் இனிப்பு வழங்கிய போது தனியாக அமர்ந்திருந்த சிறுவனுக்கு பொன்னாடை அணிவித்து அவனை மகிழ்ச்சி படுத்தினார். உடுமலை ராதாகிருஷ்ணன் எதற்காக என்ற கேள்விக்கு அம்மாவின் பிறந்தநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் குழந்தைக்கு பொன்னாடை அணிவித்ததாக கூறினார். இச்சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் சிரிப்பழையையும் ஏற்படுத்தியது