விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் இயங்காமல் பூட்டி கிடக்கும் கிராம நூலகம் மற்றும் இ- சேவை மையத்தை சீரமைத்து தொடர்ந்து இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சாத்தமங்கலத்தில் கிராம நூலகம் கட்டிடம் திறக்கப்படாமல் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டிக் கிடக்கிறது. மேலும்,நூலகத்திலிருந்த புத்தகங்களும் களவாடப்பட்டு, நூலகமானது உட்புறத்தில் வெறிச்சோடி காணப்படுகிறது. லட்சக்கணக்கில் செலவு செய்து, கட்டப்பட்ட நூலகத்தை சீரமைத்து,நாள்தோறும் நூலகம் இயங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.