திருப்பூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முதலிபாளையத்தில் பாறைக்குழிகளில் கொட்டியதால் நிலத்தடி நீர் மாசடைந்ததாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், கெட்டுப்போய் நிறம் மாறிய தண்ணீரை கேனில் பிடித்து பாடை கட்டி ஒப்பாரி வைத்து ஊர்வலமாக சென்று போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை காரணமாக முதலிபாளையம் கிராம சபை கூட்டம் ஏற்கனவே இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது முறையாக நடைபெற்ற கூட்டத்தையும் கிராம மக்கள் புறக்கணித்தனர். பாறைக்குழியில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்த வேண்டும், என்றும் நிலத்தடி நீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.