புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருமருதூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள், ஆற்றை கடந்தே பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்லும் நிலை உள்ளதால், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ள நிலையில், தினந்தோறும் பிள்ளைகளை அச்சத்துடன் பள்ளிகளுக்கு அனுப்புவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.