சென்னை, மயிலாப்பூரில் 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், புதிய திருப்பமாக மாமுலுக்காகவும், துப்புக்கொடுக்காத ஆத்திரத்திலும் பொய் வழக்காக மூன்று காவலர்கள் ஜோடித்து பெண்ணை கைது செய்தது அம்பலமானது. ஏற்கனவே அப்பெண்ணின் மீது பிளாக்கில் மதுபாட்டில் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காவலர்கள் சதி வேலையை தீட்டிய பித்தலாட்டம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெண் மீது பாய்ந்த வழக்குகஞ்சா, பிளாக்கில் மதுபாட்டில் விற்பனை, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் தலைவிரித்தாடும் நிலைமையில், அவற்றை தடுக்க வேண்டிய காவல்துறையினரே, கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பொய் கேஸ் போட்டு, ஒரு பெண்ணை சதிவலையில் சிக்க வைத்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்துகிறது. சென்னை, மயிலாப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்ததாக கடந்த 24ஆம் தேதி வனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். வீடுவீடாக சென்று தண்ணீர் கேன் போட்டு வந்த வனிதா, காலி கேன்களை தனது வீட்டின் அருகாமையில் உள்ள தர்காவில் போட்டு வைத்திருந்தார். அந்த காலி கேன்களிடையே ஒளித்து வைத்து கள்ளச்சாராயம் விற்று வந்ததாக கூறி, 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அப்பெண் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஆந்திராவிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. கள்ளச்சாராயம் விற்றதாக பொய் கேஸ்சென்னையில், கள்ளச்சாராயம் எப்படி ஊடுருவியது? என்பது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசாரின் விசாரணையில், வழக்கில் திடீர் திருப்பமாக அப்பெண் கள்ளச்சாராயம் கடத்தவும் இல்லை, விற்கவும் இல்லை என்பது தெரிய வந்து திடுக்கிட வைக்கிறது. கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் தர்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கவில்லை என்பது ஊர்ஜிதமானது. மேலும், மற்றொரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்த பார்த்தி என்பவர், கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து தர்காவில் வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அப்பெண் மீது கள்ளச்சாராய விற்பனை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்று வரும் குற்றவாளிகள் குறித்த தகவலை தெரிவிக்க மதுவிலக்கு பிரிவை சேர்ந்த காவலர்கள் வனிதாவை வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்னையில் சிக்காமல் ஒதுங்கி போக நினைத்த வனிதாவை, கள்ளச்சாராயம் விற்றதாக பொய் கேஸ் போட்டு கம்பி எண்ண வைத்ததும் அம்பலமானது.மாமூல், துப்பு கொடுக்காத ஆத்திரத்தில் காவலர்கள் சதிவலைதனது கணவர் ஒயின் ஷாப்பில் வாங்கி வந்த மதுபாட்டில்களை பிளாக்கில் விற்பனை செய்து வந்ததாகவும், தற்போது உடல்நலக்குறைவால் திருந்தி வாழ்ந்து வருவதாகவும் வனிதா குமுறியதோடு, மாமுலுக்காகவும், அவர்களின் துப்புக் கொடுக்காத ஆத்திரத்திலும் 3 காவலர்கள் தங்களை சதி வலையில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டினார். தனது கணவர் செய்த தவறுக்கு கூட தன் மீது தான் அக்காவலர்கள் வழக்கை பதிவு செய்ததாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.இதையும் பாருங்கள் - கேரளாவில், பெண் வீடியோவால் ஆண் மரணம்