ஈரோடு 46 புதூர் அன்னை நகரில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்திற்கு காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தான பீடாதிபதிகள் - ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்தார். அப்போது பக்தர்கள் ரோஜாப்பூ மாலையுடன் பூரண கும்ப மரியாதை அளித்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் மடத்தில் உள்ள சாமி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் , தமிழகத்தில் கொங்கு பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றும் கோவில்களுக்கு நிறைய திருப்பணிகள் செய்து வருகிறார்கள். மேலும் நிறைய ஆன்மீக பணிகளை செய்து ஒவ்வொரு கிராமத்திலும் ஆன்மீகம் தழைத்து பூஜைகள், வேள்விகள், அன்னதானகங்கள் சிறந்து விளங்கி நமது கலாச்சாரம், பாரம்பரியம், சேவை மனப்பாண்மை நன்றாக வளர்த்து வர வேண்டும் என்றார். கொங்கு பகுதியில் கல்வி, கலாச்சாரம், இறை பக்தி மென்மேலும் வளர்த்து அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது என்றறும் இதனுடன் நல்ல நாகரீகம், பக்தி உணர்வுகள் ஒவ்வொரு மக்களிடமும் வளர்ந்து கோவில்கள் அனைத்திலும் நன்றாக பூஜைகள் நடந்து, நெய்வேத்தியம் அன்னதானம் நடந்து கலாச்சார மாநாடு செய்ய வேண்டும் என இவர்களிடம் சொல்லியிருக்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொங்கு மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இருக்க கூடிய பூசாரிகள், அர்ச்சகர்கள், புரோகிதர்கள் அனைவரையும் அழைத்து வாஸ்து மற்றும பக்தி மார்கத்தை வளர்க்கும் விதமாக அனைத்து கிராமமும் பயன்பெறும வகையிலும், அனைத்து மக்களும் புன்னியம் பெறும் வகையிலும் வரக்கூடிய காலத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் கரூர் அருகே காவேரி கரையில் உள்ள மகேந்திரமங்கலம் கிராமத்தில் 1910ம் வருடத்தில் காஞ்சி பெரியவர் மூன்று வருடம் தங்கி இருந்த அந்த கிராமத்தை முழுமையாக கோவில், கலாச்சாரம் நிறைந்த கிராமமாக பல்வேறு ஆன்மீக பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். கொங்கு மண்டலத்தில் பல்வேறு அறப்பணிகள் மூலமாக நல்ல வளர்ச்சி, அமைதி , சுபிக்ஷம் கிடைத்து அனைவருக்கும் பெருவான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என்றும் ஆன்மீகத்திலும் சிறப்பான வளர்ச்சி பெறுவதற்கு நிகழ்ச்சிகளும், பிரார்த்தனைகளும் செய்யப்படுகிறது என்றார். Related Link "கூட்டணி குறித்து கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்"