மாட்டுப் பொங்கல் மற்றும் மகர சங்கராந்திகை விழா நாளை நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மகாநந்தியம் பெருமானுக்கு ஒரு டன் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து பக்தர்களால் வழங்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் இனிப்பு வகைகளை நந்தியம் பெருமானுக்கு அலங்கரிக்கும் வகையில் கோவிலுக்கு வர வழக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்களால் மாலையாக போர்க்கக்கூடிய பணி சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்றது. மாலையாக கோர்க்கப்பட்டு இரவு நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட உள்ளது.இதையும் படியுங்கள் : சாரங்கபாணி சுவாமி கோவில் தேரோட்டம்