ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரும், திராவிடமும் ஒழிய வேண்டும் என்பது தங்களது முழக்கம் அல்ல என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அறிவை வளர்க்கும் அரசு பள்ளிகள் சுடுகாடு போல் இருப்பதாக வேதனை தெரிவித்தார்.