திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் கோவை - திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 362 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.