இஸ்லாமியர்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாக, எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் தனியார் கல்லூரியில் பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாக்களை பாஜக பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றினால் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என கூறினார்.