தாய்லாந்து நாட்டில் கலாச்சார தூதர் பட்டம் வென்று திரும்பிய இராமநாதபுரம் மாவட்ட பெண்ணுக்கு முதுகுளத்தூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்கு காக்கூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி - அல்லிராணி தம்பதியின் மகள் ஜோதிமலர், மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025 ல் கலாச்சார தூதராக வெற்றி பெற்றுள்ளார். சொந்த ஊர் திரும்பிய அவருக்கு அரசியல் கட்சியினர், சமுதாய தலைவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் என ஏராளமானோர் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.