தமிழக வெற்றி கழக திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் விஜயகுமாரை வரவேற்க, கும்மிடிப்பூண்டி சாலையில் அக்கட்சி தொண்டர்கள் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் அனுமதியையும் மீறி ஜிஎன்டி சாலை வழியாக தவெக தொண்டர்கள் ஏராளமானோர் அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.