தென்காசி... லாட்ஜில் உள்ள ஒரு அறையில் சடலமாக கிடந்த மாவு மில் ஓனர். பக்கத்து அறையில் மதுபோதையில் இருந்த டெய்லர் மற்றும் அவரது நண்பர்கள். மாவு மில் ஓனரை டெய்லரும் அவரது நண்பர்ளும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொலை செய்தது அம்பலம். மாவு மில் ஓனரை டெய்லர் கொலை செய்து ஏன்? கொலைக்கான பின்னணி என்ன?நெல்லை, வீரவநல்லூர் பக்கத்துல உள்ள மேலபுதுக்குடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரு அதே பகுதியில மாவு மில்லு நடத்திட்டு இருந்துருக்காரு. அந்த மாவு மில்லுக்கு எதிர்ல கௌதம்ங்குறவரு டெய்லர் கடை நடத்திட்டு இருந்துருக்காரு. எதிரெதிர்ல இருந்த ரெண்டுபேருக்கும் ஏழாம்பொருத்தமா இருந்துருக்கு. டெய்லர் கடையில வெட்டிப்போடுற துண்டு துணிகளெல்லாம் காத்துல பறந்து மாவு மிலுக்குள்ள வந்துருக்குது. அப்போ, ஒரு கடைய ஒழுங்கா நடத்த முடியல, குப்பை முழுவதும் பறந்து எங்க மில்லுக்குள்ள வருது, ஒழுங்கா நடந்துறதா இருந்தா நடத்து, இல்லனா நடக்கிறதே வேறனு ராம்குமார் சண்டை போட்டதா சொல்லப்படுது. பதிலுக்கு பதில் கத்துன கௌதம் மாவு மில்லுல உள்ள தூசியெல்லாம் பறந்து என் கடைக்குள்ளதான் வருது, நீங்களும் ஒழுங்கா மில் நடத்துறதா இருந்தா நடத்துங்கனு திட்டிருக்காரு. நித்தம் ரெண்டுபேருக்குள்ளயும் இந்த வாக்குவாதம்தான் நடந்துருக்குது. ஆனா, ரெண்டுபேருல யாரும் விட்டுக்குடுக்குற மாதிரியே தெரியல. ஒருகட்டத்துல கடுப்பான கௌதம் ராம்குமாரோட கதைய முடிச்சாதான் நிம்மதியா கடைய நடத்தலாம்னு முடிவுக்கு வந்துருக்காரு. அதனால, தன்னோட நண்பர்கள் மணிகண்டன், முகமது ஆசிக் ரெண்டுபேர்கிட்டயும் மனக்குமுறல கொட்டுன கௌதம், ராம்குமாரை தீர்த்துக்கட்டணும்னு சொல்லிருக்காரு. நண்பன் சொன்னதும் ரெண்டுபேருமே ஓ..கே. சொல்லிட்டாங்க. அடுத்து கொலைக்கான திட்டம்போட்ட கௌதம், நல்லவன்போல ராம்குமாரோட கடைக்கு போயிருக்காரு. எதிரெதிர் கடையில இருந்துக்கிட்டு சண்டை போட்டுக்குறது சரியா இருக்காது, ஒற்றுமையா இருக்கலாம்னு சொன்ன கௌதம் சேர்ந்துபோய் மது குடிக்கலாம்னு சொல்லிருக்காரு. அத நம்பின ராம்குமாரும் நீங்க சொல்றது சரிதான்னு சொல்லிட்டு கூட போய்ருக்காரு.குற்றாலத்துல உள்ள ஒரு தனியார் லாட்ஜூக்குபோய் கௌதம், ராம்குமார், மணிகண்டன், முகமது ஆசிக் நாலுபேரும் மது குடிச்சிருக்காங்க. ராம்குமாருக்கு அளவுக்கு அதிகமா மதுவை ஊத்திக் குடுத்த கௌதம், உன் இஷ்டத்துக்கு எப்படி கடை நடத்த முடியும்? எப்ப பாரு துண்டுத்துணிகள் எல்லாம் மில்லுக்குள்ள வருதுனு இம்சை பண்ணிட்டே இருக்கனு கன்னத்துலயே அடிச்சிருக்காரு. அப்போ கௌதமோட நண்பர்களும் சேர்ந்து ராம்குமாரை கடுமையா தாக்கிருக்காங்க. அடுத்து, மறைச்சி வச்சிருந்த கத்தியால 3 பேரும் சேர்ந்து ராம்குமாரை குத்தி கொலை பண்ணிருக்காங்க. அதுக்குப்பிறகு பக்கத்துல இன்னொரு ரூம் புக் பண்ணி அந்த ரூமுக்கு 3 பேருமே போய் மது குடிச்சிட்டு போதையில இருந்துருக்காங்க. இதுக்கு இடையில, கணவன காணாமபோனத போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்த ராம்குமாரோட மனைவி கடைசியா கௌதம்கூடதான் போனாருனு சொல்லிருக்காங்க. அடுத்து கௌதம் செல்போன் நம்பர் டிரேஸ் பண்ணி, அவரை லாட்ஜ்ல சுத்தி வளைச்சி விசாரணை பண்ணதுல மொத்த உண்மையும் வெளிய வந்துருச்சு. குப்பை பறக்குறதெல்லாம் ஒரு விஷயம்னு ஸ்கெட்ச் போட்டு கொலை செஞ்ச கௌதமும், கூட சுத்துன பாவத்துக்கு அவரோட நண்பர்களும் சேர்ந்து கம்பி எண்ணிட்டு இருக்காங்க.