நாடு முழுவதும், இன்று ஒரே நாளில் சுமார் 550 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னையில் மட்டும் 28 புறப்பாடு, 6 வருகை என மொத்தம் 34 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இன்டிகோ நிறுவனத்தில் தற்போது போதுமான விமானிகள் இல்லாததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.