பெரியாரை இழிவாக பேசவில்லை என கூறியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பேசியதை வைத்து அரசியல் செய்தால் ஏன் பயப்படுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பெரியாரை பற்றி பேசி கிடைக்கும் ஓட்டு, அது நாதகவிற்கு தீட்டு என ஆவேசமாக கூறியுள்ளார்.